-
லேவியராகமம் 4:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 ஆனால், அந்தக் காளையின் தோல், சதை, தலை, கால்கள், குடல்கள், சாணம் ஆகியவற்றையும்+ 12 மீதமுள்ள எல்லாவற்றையும் முகாமுக்கு வெளியே சாம்பல் கொட்டப்படுகிற சுத்தமான இடத்துக்கு அவர் கொண்டுபோக வேண்டும். அந்த இடத்தில் விறகுகளை வைத்து அவற்றை எரிக்க வேண்டும்.+ அதாவது, சாம்பல் கொட்டப்படுகிற இடத்தில் அவற்றை எரிக்க வேண்டும்.
-
-
எபிரெயர் 13:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 ஏனென்றால், பாவப் பரிகார பலியாக எந்த மிருகங்களின் இரத்தத்தைத் தலைமைக் குரு மகா பரிசுத்த அறைக்குள் கொண்டுபோகிறாரோ அந்த மிருகங்களின் உடல்கள் முகாமுக்கு வெளியே சுட்டெரிக்கப்படுகின்றன.+ 12 அதனால், இயேசுவும் தன்னுடைய சொந்த இரத்தத்தால் மக்களைப் புனிதப்படுத்துவதற்காக+ நகரவாசலுக்கு வெளியே பாடுகள் பட்டார்.+
-