-
எபிரெயர் 5:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிற ஒவ்வொரு தலைமைக் குருவும், மனிதர்கள் சார்பில் கடவுளுக்குச் சேவை செய்ய நியமிக்கப்படுகிறார்;+ பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் அவர் கொடுக்கிறார்.+ 2 அதோடு, தனக்கும் பலவீனங்கள் இருப்பதை அவர் உணர்ந்திருப்பதால், தெரியாமல் தவறு செய்கிறவர்களிடம்* கரிசனையோடு* நடந்துகொள்கிறார். 3 மக்களுடைய பாவங்களுக்காக அவர் பலி கொடுப்பது போல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலி கொடுக்க வேண்டும்.+
-