உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 26:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 ஏனென்றால் இது, ‘ஒப்பந்தத்தை+ உறுதிப்படுத்தும் என் இரத்தத்தை’+ குறிக்கிறது; என் இரத்தம், பாவ மன்னிப்புக்கென்று+ பலருக்காகச் சிந்தப்படப்போகிறது.+

  • ரோமர் 3:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 கிறிஸ்துவின் இரத்தத்தில் விசுவாசம் வைப்பதன் மூலம்+ மனிதர்கள் தன்னோடு சமாதானமாவதற்காக அவரைப் பிராயச்சித்த பலியாக* கடவுள் கொடுத்தார்.+ முற்காலத்தில் செய்யப்பட்ட பாவங்களைச் சகித்துக்கொண்டு மன்னித்தது நீதியான செயல் என்பதைக் காட்டுவதற்காக அவர் அப்படிச் செய்தார்.

  • ரோமர் 5:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலம் நாம் இப்போது நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதால்,+ கடவுளுடைய கடும் கோபத்துக்குத் தப்பி அவர் மூலம் காப்பாற்றப்படுவது அதிக நிச்சயம், இல்லையா?+

  • எபேசியர் 1:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அவருடைய அளவற்ற கருணையின்படி, அந்த அன்பு மகன் தன்னுடைய இரத்தத்தை மீட்புவிலையாகக் கொடுத்தார்.+ அதனால் நமக்கு விடுதலை கிடைத்திருக்கிறது, அதாவது நம் குற்றங்களுக்கு மன்னிப்பு கிடைத்திருக்கிறது.+

  • எபிரெயர் 9:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தால் சுத்தமாக்கப்படுகின்றன;+ இரத்தம் சிந்தப்படவில்லை என்றால், மன்னிப்பு இல்லை.+

  • எபிரெயர் 13:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அதனால், இயேசுவும் தன்னுடைய சொந்த இரத்தத்தால் மக்களைப் புனிதப்படுத்துவதற்காக+ நகரவாசலுக்கு வெளியே பாடுகள் பட்டார்.+

  • 1 பேதுரு 1:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 நீங்கள் பரலோகத் தகப்பனாகிய கடவுளுக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்பட்டவர்களாகவும்+ இருப்பதற்காக, கடவுளுடைய முன்னறிவின்படி+ தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருடைய சக்தியால் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறீர்கள்.+

  • 1 யோவான் 1:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஆனாலும், அவர் ஒளியில் இருப்பதுபோல் நாமும் ஒளியில் நடந்தால், ஒருவரோடொருவர் ஒன்றுபட்டிருப்போம். அதோடு, அவருடைய மகனான இயேசுவின் இரத்தம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்கும்.+

  • வெளிப்படுத்துதல் 1:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைப்பதாக. இவர்தான் “நம்பகமான சாட்சி,”+ “முதன்முதலில் உயிர்த்தெழுப்பப்பட்டவர்,”+ “பூமியின் ராஜாக்களுக்குத் தலைவர்.”+

      நம்மேல் அன்பு வைத்திருக்கிற இவர்+ தன்னுடைய இரத்தத்தால் பாவங்களிலிருந்து நம்மை விடுதலை செய்து,+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்