4 பின்பு, “இஸ்ரவேலர்களே, நீங்கள் கடைப்பிடிப்பதற்காக இப்போது நான் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிற விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கேட்டு நடங்கள். அப்போது வாழ்வு பெறுவீர்கள்,+ உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா கொடுக்கப்போகிற தேசத்துக்குப் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள்.