-
உபாகமம் 20:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 உங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் ஆகிய எல்லாரையும் அடியோடு அழித்துவிட வேண்டும்.+ 18 இல்லாவிட்டால், அவர்களுடைய தெய்வங்களுக்குச் செய்கிற அருவருப்பான காரியங்களை அவர்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்ய வைத்துவிடுவார்கள்.+
-
-
2 ராஜாக்கள் 16:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 ஆகாஸ் ராஜாவானபோது அவருக்கு 20 வயது; அவர் எருசலேமில் 16 வருஷங்கள் ஆட்சி செய்தார்; தன்னுடைய மூதாதையான தாவீது யெகோவா தேவனுக்குப் பிரியமாக நடந்ததுபோல் அவர் நடக்கவில்லை.+ 3 அதற்குப் பதிலாக, இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்தார்;+ தன்னுடைய சொந்த மகனையே நெருப்பில் பலி கொடுத்தார்.*+ இப்படி, இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்.+
-