உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 3:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அதனால், எகிப்தியர்களுடைய பிடியிலிருந்து உங்களை விடுதலை செய்து,+ கானானியர்களும் ஏத்தியர்களும் எமோரியர்களும்+ பெரிசியர்களும் ஏவியர்களும் எபூசியர்களும்+ வாழ்கிற தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன். அது பாலும் தேனும் ஓடுகிற தேசம்”’+ என்று சொல்.

  • யாத்திராகமம் 6:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் எந்தத் தேசத்தைக் கொடுப்பதாக நான் உறுதிமொழி தந்தேனோ அந்தத் தேசத்துக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு போவேன். அதை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்.+ நான் யெகோவா’”+ என்றார்.

  • உபாகமம் 8:7-9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை நல்ல தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போகிறார்.+ அங்கே சமவெளிகளிலும் மலைப்பகுதிகளிலும் நீரோடைகள் பாய்ந்தோடுகின்றன, நீரூற்றுகள் பொங்கியெழுகின்றன. 8 அங்கே கோதுமையும், பார்லியும், திராட்சைக் கொடிகளும், அத்தி மரங்களும், மாதுளைச் செடிகளும்,+ ஒலிவ எண்ணெயும், தேனும்+ ஏராளமாக இருக்கின்றன. 9 உணவுப் பொருள்களுக்குப் பஞ்சமே இல்லாத தேசம் அது. அங்கே உங்களுக்கு எதற்குமே குறைவு இருக்காது. அங்கே உள்ள பாறைகளிலிருந்து இரும்பும் மலைகளிலிருந்து செம்பும் கிடைக்கும்.

  • எசேக்கியேல் 20:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நான் அவர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் வாழ வைப்பதாக அந்த நாளில் வாக்குறுதி கொடுத்தேன்.+ அது தேசங்களிலேயே மிக அழகான* தேசம், நானே தேர்ந்தெடுத்த* தேசம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்