-
ஆதியாகமம் 15:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அவரிடம் கடவுள், “உன்னுடைய சந்ததியில் வருகிறவர்கள் வேறொரு தேசத்தில் அன்னியர்களாகக் குடியிருப்பார்கள்; அந்தத் தேசத்து ஜனங்கள் 400 வருஷங்களுக்கு+ அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள். இது நடக்கப்போவது உறுதி. 14 ஆனால், அவர்களை அடிமைப்படுத்திய தேசத்தை நான் தண்டிப்பேன்.+ அதன்பின், அவர்கள் அங்கிருந்து நிறைய பொருள்களை எடுத்துக்கொண்டு வருவார்கள்.+
-
-
லேவியராகமம் 26:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை நான் விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்தேன். உங்கள் நுகத்தடியை உடைத்துப்போட்டு உங்களைத் தலைநிமிர்ந்து நடக்க வைத்தேன்.
-