உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 21:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ஆனால், எகிப்தியப் பெண் ஆகார் மூலமாக ஆபிரகாமுக்குப் பிறந்த மகன், ஈசாக்கைக் கேலி செய்வதை+ சாராள் கவனித்துக்கொண்டே இருந்தாள்.+

  • யாத்திராகமம் 1:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அவர்களைக் கொத்தடிமைகள் போல நடத்தினார்கள்.+ 14 வாழ்க்கையே வெறுத்துப்போகும் அளவுக்கு அவர்களை வேலை வாங்கினார்கள். களிமண் சாந்தும் செங்கலும் தயாரிக்கிற வேலைகளையும், எல்லாவித வயல் வேலைகளையும் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள். இப்படி, அவர்களைப் படாத பாடுபடுத்தி, சக்கையாகப் பிழிந்தெடுத்தார்கள்.+

  • யாத்திராகமம் 3:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதன் பின்பு யெகோவா, “எகிப்தில் என்னுடைய ஜனங்கள் படுகிற கஷ்டத்தை நான் பார்த்தேன். வேலை வாங்குகிறவர்களுடைய கொடுமை தாங்காமல் அவர்கள் கதறுவதைக் கேட்டேன். அவர்களுடைய வலியும் வேதனையும் எனக்கு நன்றாகவே தெரியும்.+

  • அப்போஸ்தலர் 7:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அதுமட்டுமல்ல, அவருடைய சந்ததியில் வருகிறவர்கள் வேறொரு தேசத்தில் அன்னியர்களாகக் குடியிருப்பார்கள் என்றும், அந்தத் தேசத்து மக்கள் 400 வருஷங்களுக்கு அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள் என்றும் சொன்னார்.+ 7 அதோடு, ‘அவர்களை அடிமைப்படுத்திய அந்தத் தேசத்தை நான் தண்டிப்பேன்’+ என்றும், ‘அதன் பின்பு அவர்கள் அங்கிருந்து வெளியே வந்து, இந்த இடத்தில் எனக்குப் பரிசுத்த சேவை செய்வார்கள்’+ என்றும் சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்