13 அவரிடம் கடவுள், “உன்னுடைய சந்ததியில் வருகிறவர்கள் வேறொரு தேசத்தில் அன்னியர்களாகக் குடியிருப்பார்கள்; அந்தத் தேசத்து ஜனங்கள் 400 வருஷங்களுக்கு+ அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள். இது நடக்கப்போவது உறுதி.
22 உதாரணமாக, ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன்,+ இன்னொருவன் சுதந்திரப் பெண்ணிடம் பிறந்தவன்.+