6 அதன்பின், தேவதாரு மரக்கட்டையையும் மருவுக்கொத்தையும்+ கருஞ்சிவப்பு துணியையும் குருவானவர் எடுத்து, அந்தப் பசு எரிக்கப்படுகிற நெருப்பில் போட வேண்டும். 7 பின்பு, அவர் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அதற்குப்பின் அவர் முகாமுக்குள் வரலாம். ஆனால், அவர் சாயங்காலம்வரை தீட்டுள்ளவராக இருப்பார்.