26 நான் அவர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்வேன்.+ அது என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர்களை நிலைநாட்டி, ஏராளமாகப் பெருக வைப்பேன்.+ என்னுடைய ஆலயத்தை அவர்களுக்கு நடுவில் என்றென்றும் நிறுத்துவேன்.
3 அப்போது, சிம்மாசனத்திலிருந்து வந்த உரத்த குரல் ஒன்று, “இதோ! கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். கடவுளே அவர்களோடு இருப்பார்.+