25 பாவத்துக்காகச் செலுத்தப்படும் பலியின் இரத்தத்தில் கொஞ்சத்தைக் குருவானவர் தன்னுடைய விரலில் தொட்டு, தகன பலிக்கான பலிபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும்.+ மீதமுள்ள இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.+
18 பின்பு, யெகோவாவின் சன்னிதியில் இருக்கிற பலிபீடத்துக்கு+ வந்து அதைச் சுத்திகரிக்க வேண்டும். காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தையும் வெள்ளாட்டின் இரத்தத்தில் கொஞ்சத்தையும் எடுத்து, பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் இருக்கிற கொம்புகள்மேல் பூச வேண்டும்.