8 உடனே, ஆரோன் பலிபீடத்துக்குப் போய்த் தன்னுடைய பாவத்துக்குப் பலியாகக் கன்றுக்குட்டியை வெட்டினார்.+9 அதன் இரத்தத்தை+ அவருடைய மகன்கள் அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் விரலில் தொட்டு பலிபீடத்தின் கொம்புகள்மேல் பூசினார். மீதியிருந்த இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினார்.+
18 பின்பு, யெகோவாவின் சன்னிதியில் இருக்கிற பலிபீடத்துக்கு+ வந்து அதைச் சுத்திகரிக்க வேண்டும். காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தையும் வெள்ளாட்டின் இரத்தத்தில் கொஞ்சத்தையும் எடுத்து, பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் இருக்கிற கொம்புகள்மேல் பூச வேண்டும்.