-
லேவியராகமம் 12:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அவர் அவற்றை யெகோவாவின் முன்னிலையில் செலுத்தி, அவளுக்காகப் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, இரத்தப்போக்கினால் ஏற்பட்ட தீட்டு நீங்கி அவள் சுத்தமாவாள். ஆண் குழந்தையையோ பெண் குழந்தையையோ பெற்றவளுக்காகக் கொடுக்கப்படும் சட்டம் இதுதான். 8 ஆனால், ஆட்டுக்குட்டியைக் கொடுக்க வசதி இல்லாவிட்டால், இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ+ அவள் கொண்டுவர வேண்டும். ஒன்றைத் தகன பலியாகவும் மற்றொன்றைப் பாவப் பரிகார பலியாகவும் கொடுக்க வேண்டும். அவளுக்காக குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவள் சுத்தமாவாள்’” என்றார்.
-
-
லேவியராகமம் 14:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 இவற்றைச் செலுத்த வசதியில்லாத ஒரு ஏழையாக அவன் இருந்தால், பாவப் பரிகாரம் செய்வதற்காக ஒரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைக் குற்ற நிவாரண பலியாகவும் அசைவாட்டும் காணிக்கையாகவும் அவன் கொண்டுவர வேண்டும். உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கும்,* எண்ணெயைச் சுமார் 300 மில்லியும் கொண்டுவர வேண்டும். 22 அதோடு, இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டுவர வேண்டும். ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும்+ கொடுக்க வேண்டும்.
-
-
லேவியராகமம் 15:13-15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 ஒழுக்கு நின்றுவிட்டால், அது நின்று ஏழு நாட்களுக்குப் பிறகு அவன் தன் உடைகளைத் துவைத்து, ஊற்றுநீரில் குளிக்க வேண்டும். அப்போது, அவன் தீட்டில்லாதவனாக இருப்பான்.+ 14 எட்டாம் நாளில் இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ அவன் கொண்டுவர வேண்டும்.+ அவற்றை யெகோவாவின் முன்னிலையில் சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும். 15 குருவானவர் அவற்றில் ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் செலுத்த வேண்டும். இப்படி, யெகோவாவின் முன்னிலையில் அவனுக்குப் பாவப் பரிகாரம் செய்து அவனைத் தீட்டிலிருந்து சுத்திகரிக்க வேண்டும்.
-