40 ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு நைசான மாவையும் இடித்துப் பிழிந்த ஒரு லிட்டர் சுத்தமான ஒலிவ எண்ணெயையும் கலந்து எடுத்துக்கொள். அதோடு, ஒரு லிட்டர் திராட்சமதுவைக் காணிக்கையாக எடுத்துக்கொள். இவற்றை முதலாம் செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடன் செலுத்து.