40 ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* நைசான மாவையும் இடித்துப் பிழிந்த ஒரு லிட்டர்* சுத்தமான ஒலிவ எண்ணெயையும் கலந்து எடுத்துக்கொள். அதோடு, ஒரு லிட்டர் திராட்சமதுவைக் காணிக்கையாக எடுத்துக்கொள். இவற்றை முதலாம் செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடன் செலுத்து.
2பின்பு அவர், “‘ஒருவன் யெகோவாவுக்கு உணவுக் காணிக்கையை+ கொண்டுவர விரும்பினால், நைசான மாவில் எண்ணெய் ஊற்றி, அதன்மேல் சாம்பிராணி வைத்துக் கொண்டுவர வேண்டும்.+
11 நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எந்த உணவுக் காணிக்கையிலும் புளிப்பு சேர்க்கக் கூடாது.+ புளித்த மாவையோ தேனையோ* யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தக் கூடாது.