-
எண்ணாகமம் 15:2-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் கொடுக்கப்போகிற தேசத்துக்கு+ நீங்கள் போய்ச் சேர்ந்த பின்பு, 3 ஒரு மாட்டையோ ஆட்டையோ யெகோவாவுக்குப் பிடித்த வாசனை பலியாக+ அவருடைய பலிபீடத்தில் செலுத்த நீங்கள் விரும்பலாம். அதைத் தகன பலியாகவோ,+ விசேஷமாக நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும் பலியாகவோ, நீங்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலியாகவோ,+ பண்டிகைகளுக்கான பலியாகவோ+ யெகோவாவுக்குச் செலுத்தினால், 4 அதற்கான உணவுக் காணிக்கையாக, ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* நைசான மாவில்+ ஒரு லிட்டர்* எண்ணெய் கலந்து யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.
-