-
யாத்திராகமம் 29:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 பின்பு அவர், “எனக்குக் குருத்துவச் சேவை செய்வதற்காக நீ அவர்களைப் புனிதப்படுத்த வேண்டும். அதற்காக நீ செய்ய வேண்டியது இதுதான்: ஒரு இளம் காளையையும் எந்தக் குறையும் இல்லாத இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் தேர்ந்தெடு.+ 2 நைசான கோதுமை மாவில் புளிப்பில்லாத ரொட்டிகளையும், எண்ணெயில் பிசைந்து சுடப்பட்ட புளிப்பில்லாத வட்ட ரொட்டிகளையும், எண்ணெய் தடவிய மெல்லிய ரொட்டிகளையும்+ செய்து, 3 ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு வா.+ அதோடு, நீ தேர்ந்தெடுத்த காளையையும் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொண்டுவா.
-
-
லேவியராகமம் 6:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 உணவுக் காணிக்கைக்கான சட்டம் இதுதான்:+ உணவுக் காணிக்கையைப் பலிபீடத்தின் முன்பு யெகோவாவின் முன்னிலையில் ஆரோனின் மகன்கள் படைக்க வேண்டும். 15 அவர்களில் ஒருவன் அதிலிருந்து ஒரு கைப்பிடி நைசான மாவையும், கொஞ்சம் எண்ணெயையும், சாம்பிராணி முழுவதையும் எடுத்து, மொத்த காணிக்கைக்கும் அடையாளமாக அதைப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+
-