29 யெகோவாவாகிய நான்தான் உங்களுக்கு ஓய்வுநாளைத் தந்திருக்கிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள்.+ அதனால்தான், ஆறாம் நாளில் இரண்டு நாளைக்குத் தேவையான உணவைத் தருகிறேன். ஏழாம் நாளில், எல்லாரும் அவரவர் இடத்திலேயே இருக்க வேண்டும். யாரும் வெளியே போகக் கூடாது” என்றார்.
10 ஆனால், ஏழாம் நாள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கான ஓய்வுநாள். அன்றைக்கு நீங்களோ, உங்கள் மகனோ மகளோ, உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆணோ பெண்ணோ, உங்கள் ஊர்களில் குடியிருக்கிற வேறு தேசத்துக்காரனோ, உங்கள் மிருகமோ எந்த வேலையும் செய்யக் கூடாது.+
12 எனக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு அடையாளமாக+ இருப்பதற்காக ஓய்வுநாளையும் கொடுத்தேன்.+ யெகோவாவாகிய நான்தான் அவர்களைப் புனிதப்படுத்தும் கடவுள் என்று அவர்கள் தெரிந்துகொள்வதற்காக அப்படிச் செய்தேன்.