-
உபாகமம் 3:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிற இந்த நகரங்களில், உங்களுடைய மனைவிமக்களும் கால்நடைகளும் மட்டுமே தங்கட்டும். உங்களுக்கு ஏராளமான கால்நடைகள் இருப்பது எனக்கு நன்றாகத் தெரியும். 20 யெகோவா உங்களுக்கு ஓய்வு தந்தது போல உங்கள் சகோதரர்களுக்கும் ஓய்வு தருகிற வரையிலும், உங்கள் கடவுளாகிய யெகோவா யோர்தானுக்கு அந்தப் பக்கத்தில் கொடுக்கப்போகும் தேசத்தை அவர்கள் சொந்தமாக்கிக்கொள்கிற வரையிலும் நீங்கள் அவர்கள் முன்னால் போக வேண்டும். அதன்பின், உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் கொடுத்திருக்கிற இடத்துக்கு நீங்கள் திரும்பி வரலாம்’+ என்று சொன்னேன்.
-
-
யோசுவா 1:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 யோர்தானுக்குக் கிழக்கே மோசே உங்களுக்குக் கொடுத்த இடத்திலேயே உங்கள் மனைவிகளும் பிள்ளைகளும் கால்நடைகளும் தங்கியிருக்கட்டும்.+ ஆனால், உங்களில் பலம்படைத்த வீரர்கள் எல்லாரும்+ உங்கள் சகோதரர்களுக்கு முன்னால் படைபோல் அணிவகுத்துப் போய் யோர்தானைக் கடக்க வேண்டும்.+ 15 யெகோவா உங்களுக்கு நிம்மதி தந்தது போல உங்கள் சகோதரர்களுக்கும் நிம்மதி தரும்வரை, அதாவது உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தை அவர்களும் சொந்தமாக்கும்வரை, நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பின்பு, யெகோவாவின் ஊழியரான மோசே யோர்தானுக்குக் கிழக்கே உங்களுக்குக் கொடுத்த தேசத்துக்குத் திரும்பி வந்து அங்கே குடியிருக்கலாம்’ என்று சொன்னதை நினைத்துப் பாருங்கள்”+ என்றார்.+
-