-
யோசுவா 12:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 யோர்தானின் கிழக்குப் பகுதியில் இருந்த தேசத்தை, அதாவது அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து*+ எர்மோன் மலை+ வரையிலும் கிழக்கே அரபா முழுவதிலும்+ இருந்த தேசத்தை, இஸ்ரவேலர்கள் கைப்பற்றி, அங்கிருந்த ராஜாக்களைத் தோற்கடித்திருந்தார்கள். 2 அவர்களில் ஒருவன்தான், எஸ்போனில் வாழ்ந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன்.+ அவன் அர்னோன் பள்ளத்தாக்கின்+ ஓரத்தில் இருக்கிற ஆரோவேர் நகரத்தையும்+ கீலேயாத்தின் பாதிப் பிரதேசத்தையும் ஆட்சி செய்தான். அர்னோன் பள்ளத்தாக்கின் மத்தியப் பகுதியிலிருந்து யாபோக் பள்ளத்தாக்கு வரையுள்ள முழு பகுதியையும் ஆட்சி செய்தான். இந்த யாபோக் பள்ளத்தாக்கு அம்மோனியர்களின் எல்லையாகவும் இருந்தது.
-