2 பின்பு, நூனின் மகன் யோசுவா இரண்டு உளவாளிகளை சித்தீமிலிருந்து+ ரகசியமாக அனுப்பி, “நீங்கள் போய் கானான் தேசத்தை உளவு பாருங்கள், முக்கியமாக எரிகோ நகரத்தை உளவு பாருங்கள்” என்று சொன்னார். அதனால், அவர்கள் எரிகோவுக்குப் போய் ராகாப்+ என்ற விலைமகளின் வீட்டில் தங்கினார்கள்.