-
லேவியராகமம் 5:16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 பரிசுத்த இடத்துக்கு விரோதமாகத் தான் செய்த பாவத்துக்கு அவன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தைச் சேர்த்து குருவானவரிடம் கொடுக்க வேண்டும்.+ குருவானவர் குற்ற நிவாரண பலியாகிய செம்மறியாட்டுக் கடாவைச் செலுத்தி அவனுக்குப் பாவப் பரிகாரம் செய்வார்.+ அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.+
-
-
லேவியராகமம் 6:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 எந்தக் குறையுமில்லாத ஒரு செம்மறியாட்டுக் கடாவை மந்தையிலிருந்து கொண்டுவந்து தன்னுடைய குற்ற நிவாரண பலியாகக் குருவானவரிடம் கொடுக்க வேண்டும். தன் குற்றத்துக்காக யெகோவாவுக்கு அவன் செலுத்தும் இந்தப் பலி, நிர்ணயிக்கப்பட்ட மதிப்பின்படி இருக்க வேண்டும்.+ 7 குருவானவர் யெகோவாவின் முன்னிலையில் அவனுக்காகப் பாவப் பரிகாரம் செய்வார். இப்படிப்பட்ட எந்தக் குற்றத்தை அவன் செய்திருந்தாலும் அது மன்னிக்கப்படும்”+ என்றார்.
-