17 லேயாளுடைய ஜெபத்துக்குக் கடவுள் பதில் தந்தார். அவள் கர்ப்பமாகி யாக்கோபுக்கு ஐந்தாவது மகனைப் பெற்றுக் கொடுத்தாள். 18 அப்போது லேயாள், “என்னுடைய வேலைக்காரியை என் கணவருக்குக் கொடுத்ததால் கடவுள் எனக்கு நல்ல கூலியைக் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு இசக்கார்*+ என்று பெயர் வைத்தாள்.