2 “ஆரோனையும் அவனுடைய மகன்களையும்+ வரச் சொல். உடைகள்,+ அபிஷேகத் தைலம்,+ பாவப் பரிகார பலிக்கான காளை, இரண்டு செம்மறியாட்டுக் கடாக்கள், புளிப்பில்லாத ரொட்டிகள்+ உள்ள கூடை ஆகியவற்றை எடுத்துக்கொள். 3 ஜனங்கள் எல்லாரும் சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலுக்கு முன்னால் கூடிவரும்படி செய்” என்றார்.