உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 15:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 இஸ்ரவேலர்கள் எல்லாரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துகொண்டும்,+ ஊதுகொம்பை ஊதிக்கொண்டும், எக்காளங்களை முழங்கிக்கொண்டும்,+ ஜால்ராக்களைத் தட்டிக்கொண்டும், நரம்பிசைக் கருவிகள், யாழ்கள் ஆகியவற்றைச் சத்தமாக இசைத்துக்கொண்டும்+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள்.

  • 2 நாளாகமம் 5:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஆசாப்,+ ஏமான்,+ எதித்தூன்,+ இவர்களுடைய மகன்கள், சகோதரர்கள் ஆகியோரின் குழுவைச் சேர்ந்த லேவிய பாடகர்கள்+ எல்லாரும் உயர்தர உடையை அணிந்துகொண்டு, ஜால்ராக்களையும் நரம்பிசைக் கருவிகளையும் யாழ்களையும் பிடித்துக்கொண்டு பலிபீடத்துக்குக் கிழக்கே நின்றார்கள். இவர்களுடன் 120 குருமார்கள் எக்காளங்களை ஊதினார்கள்.+

  • 2 நாளாகமம் 7:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 குருமார்கள் அவரவர் பணி செய்யும் இடங்களில் நின்றுகொண்டிருந்தார்கள். அதேபோல, லேவியர்களும் யெகோவாவுக்குப் பாடல்கள் பாட இசைக் கருவிகளை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்கள்.+ (யெகோவாவுக்கு நன்றிப் பாடல் பாடுவதற்காக இந்த இசைக் கருவிகளை தாவீது ராஜா உருவாக்கியிருந்தார். தாவீது பாடும்போது, “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று சொல்லி அவர்கள்* பதில்பாட்டுப் பாடுவார்கள்.) பின்பு, லேவியர்களுக்கு எதிரில் இருந்த குருமார்கள் சத்தமாக எக்காளங்களை ஊதினார்கள்.+ அப்போது, இஸ்ரவேலர்கள் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.

  • எஸ்றா 3:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டபோது,+ குருமார்கள் தங்களுக்குரிய உடையில் எக்காளங்களோடும்,+ லேவியர்களான ஆசாபின் வம்சத்தார் ஜால்ராக்களோடும் எழுந்து நின்று யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள்; இஸ்ரவேல் ராஜா தாவீது கட்டளை கொடுத்திருந்தபடியே+ அப்படிச் செய்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்