23 அதற்கு அவர், “யெகோவா சொல்லியிருப்பது இதுதான். நாளைக்கு முழு ஓய்வுநாள், அது யெகோவாவுக்கான பரிசுத்த ஓய்வுநாள்.+ அதனால், நீங்கள் சுட்டு வைக்க வேண்டியதைச் சுட்டு வைத்துக்கொள்ளுங்கள், வேக வைக்க வேண்டியதை வேக வைத்துக்கொள்ளுங்கள்.+ மீதியை அடுத்த நாள் காலைக்காக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.