4 அவர்களோடு இருந்த பலதரப்பட்ட ஜனங்கள்+ உணவுக்காக ஆலாய்ப் பறந்தார்கள்.+ இஸ்ரவேலர்கள்கூட மறுபடியும் அழுது புலம்பி, “யார் நமக்கு இறைச்சி தருவார்கள்?+ 5 எகிப்தில் காசே கொடுக்காமல் மீன், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு எல்லாம் சாப்பிட்டோமே! அதை நினைத்தாலே வாய் ஊறுகிறது.+