11 ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும், யெகோவாவுக்குத் தகன பலியாக இரண்டு இளம் காளைகளையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், குறையில்லாத ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் செலுத்த வேண்டும்.+
14 ஒவ்வொரு காளையுடனும் ஒன்றே முக்கால் லிட்டர்* திராட்சமதுவையும்,+ செம்மறியாட்டுக் கடாவுடன் ஒன்றேகால் லிட்டர்* திராட்சமதுவையும்,+ ஒவ்வொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடனும் ஒரு லிட்டர்*+ திராட்சமதுவையும் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். வருஷத்தின் எல்லா மாதங்களிலும் செலுத்த வேண்டிய தகன பலி இதுதான்.