11 ரெப்பாயீமியர்களில் கடைசியாக இருந்தது பாசானின் ராஜாவாகிய ஓக் மட்டும்தான். அவனுக்காக இரும்பினால்* செய்யப்பட்ட சவப்பெட்டி அம்மோனியர்களின் நகரமாகிய ரப்பாவில் இன்னும் இருக்கிறது. அதன் நீளம் ஒன்பது முழம்,* அகலம் நான்கு முழம்.
12 அஸ்தரோத்திலிருந்தும் எத்ரேயிலிருந்தும் ஆட்சி செய்த பாசானின் ராஜாவாகிய ஓகின் ராஜ்யம் முழுவதையும் பெற்றுக்கொண்டார்கள். (ரெப்பாயீமியர்களில் கடைசியாக இருந்தது அவன் மட்டும்தான்.)+ மோசே அவர்களைத் தோற்கடித்து அங்கிருந்து துரத்தியிருந்தார்.+