33 அதன்பின் அவர்கள் அங்கிருந்து திரும்பி, பாசானுக்குப் போகும் சாலை வழியாகப் போனார்கள். அப்போது, அவர்களோடு போர் செய்வதற்காக பாசானின் ராஜாவாகிய ஓக்+ தன்னுடைய ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு எத்ரேய்க்கு வந்தான்.+
4 பின்பு, அவனுடைய எல்லா நகரங்களையும் கைப்பற்றினோம். அவர்களிடமிருந்து நாம் கைப்பற்றாத இடங்களே கிடையாது. பாசானிலுள்ள ஓகின் ராஜ்யத்தில், அதாவது அர்கோப் பிரதேசத்தில், மொத்தம் 60 நகரங்களைக் கைப்பற்றினோம்.+