-
எண்ணாகமம் 23:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அப்போது பாலாக், “தயவுசெய்து இன்னொரு இடத்துக்கு என்னோடு வா. அங்கே அவர்கள் எல்லாரையும் உன்னால் பார்க்க முடியாது, சிலரை மட்டும்தான் பார்க்க முடியும். எனக்காக அவர்களை அங்கிருந்து சபி”+ என்றான். 14 அதன்படியே, பிலேயாமை பிஸ்காவின் உச்சியிலுள்ள+ சோப்பீமின் வெட்டவெளிக்குக் கூட்டிக்கொண்டு போனான். அங்கே ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலி செலுத்தினான்.+
-
-
எண்ணாகமம் 23:28-30பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 அப்படிச் சொல்லி, பேயோரின் உச்சிக்கு பிலேயாமைக் கூட்டிக்கொண்டு போனான். அது எஷிமோனை* பார்த்தபடி இருந்தது.+ 29 அப்போது பிலேயாம் பாலாக்கிடம், “இந்த இடத்தில் ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் எனக்காகக் கொண்டுவாருங்கள்”+ என்றான். 30 பிலேயாம் சொன்னபடியே பாலாக் செய்தான். ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலி செலுத்தினான்.
-