உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 27:37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 37 அதற்கு ஈசாக்கு, “நான் அவனை உனக்கு எஜமானாக நியமித்துவிட்டேன்.+ அவனுடைய சகோதரர்கள் எல்லாரையும் அவனுக்கு வேலையாட்களாகக் கொடுத்துவிட்டேன். தானியங்களையும் புதிய திராட்சமதுவையும் அவனுக்குத் தந்துவிட்டேன்.+ அப்படியிருக்கும்போது, என் மகனே, நான் உனக்கு வேறென்ன கொடுக்க முடியும்?” என்று கேட்டார்.

  • 2 சாமுவேல் 8:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஏதோமில், சொல்லப்போனால் ஏதோம் முழுவதிலும், காவல்படைகளை நிறுத்திவைத்தார். ஏதோமியர்கள் எல்லாரும் தாவீதுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்கள்.+ அவர் போன இடமெல்லாம் அவருக்கு வெற்றி கிடைக்க யெகோவா உதவி செய்தார்.+

  • ஆமோஸ் 9:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ‘விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை அந்த நாளிலே எடுத்து நிறுத்துவேன்.+

      கூடாரத்தின் கிழிசல்களைத் தைப்பேன்.*

      சேதமானவற்றைச் சரிசெய்வேன்.

      பூர்வ காலத்தில் இருந்ததைப் போலவே திரும்பக் கட்டுவேன்.+

      12 ஏதோமில் மிச்சம் இருப்பதெல்லாம் அப்போது அவர்களுடைய சொத்தாகும்.+

      என்னுடைய பெயரால் அழைக்கப்படுகிற எல்லா தேசங்களும் அவர்களுக்குச் சொந்தமாகும்.’

      இவற்றைச் செய்கிற யெகோவாவே இதைச் சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்