உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 16:39, 40
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 அதனால் குருவாகிய எலெயாசார், நெருப்பில் பொசுங்கிய ஆட்களின் செம்புத் தூபக்கரண்டிகளைப் பலிபீடத்தைச் சுற்றிலும் பொருத்துவதற்காகத் தகடுகளாக அடித்தார். 40 யெகோவா மோசேயின் மூலம் சொன்னபடியே அவர் செய்தார். தகுதி இல்லாத யாரும், அதாவது ஆரோனின் வம்சத்தைச் சேராத யாரும், யெகோவாவின் முன்னிலையில் தூபம்காட்டக் கூடாது+ என்பதையும், கோராகுவையும் அவருடைய கூட்டாளிகளையும் போல யாரும் ஆகிவிடக் கூடாது+ என்பதையும் அந்தத் தகடுகள் இஸ்ரவேலர்களுக்கு ஞாபகப்படுத்தின.

  • 1 சாமுவேல் 6:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பெத்-ஷிமேஸ் ஆட்கள் யெகோவாவின் பெட்டியைப் பார்த்ததால், அவர்களில் 50,070 பேரைக் கடவுள் கொன்றுபோட்டார்.+ அத்தனை பேரை யெகோவா கொன்றதால் ஜனங்கள் துக்கம் தாங்காமல் அழுதார்கள்.

  • 2 நாளாகமம் 26:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 வலிமைமிக்கவராக ஆனதும், அவருக்கு ஆணவம் தலைக்கேறியது. அதுவே அவருடைய அழிவுக்குக் காரணமானது. யெகோவாவின் ஆலயத்துக்குள்ளே நுழைந்து தூபபீடத்தில் தூபம் காட்டப் போனதன் மூலம் தன்னுடைய கடவுளான யெகோவாவின் கட்டளையை அவர் மீறினார்.+

  • 2 நாளாகமம் 26:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அவர்கள் உசியா ராஜாவைத் தடுத்து, “உசியா, நீங்கள் யெகோவாவுக்குத் தூபம் காட்டுவது சரியில்லை! குருமார்கள் மட்டும்தான் தூபம் காட்ட வேண்டும்,+ அவர்கள்தான் ஆரோனின் வம்சத்தில் வந்தவர்கள்,+ அவர்கள்தான் இந்த வேலைக்காகப் புனிதப்படுத்தப்பட்டவர்கள். பரிசுத்த இடத்தைவிட்டு வெளியே போங்கள். நீங்கள் உண்மையில்லாமல் நடந்துகொண்டீர்கள். இப்படிச் செய்ததற்காக யெகோவா தேவனிடமிருந்து உங்களுக்கு எந்த மகிமையும் கிடைக்காது” என்று சொன்னார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்