-
ஆதியாகமம் 38:7-10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 ஆனால், யூதாவின் மூத்த மகன் ஏர் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவந்தான். அதனால் யெகோவா அவனைக் கொன்றுபோட்டார். 8 அவன் இறந்துவிட்டதால் யூதா தன்னுடைய மகன் ஓனேனிடம், “கொழுந்தனுடைய* கடமைப்படி நீ உன் அண்ணன் மனைவியைக் கல்யாணம் செய்துகொண்டு அவனுக்கு வாரிசு உண்டாக்கு”+ என்றார். 9 அது தன்னுடைய வாரிசாக இருக்காது+ என்று ஓனேனுக்குத் தெரிந்ததால், தன்னுடைய அண்ணனின் மனைவியோடு உறவுகொண்ட எல்லா சமயத்திலும் தன் விந்துவைத் தரையில் விழவைத்தான்.+ 10 அவன் செய்தது யெகோவாவுக்குப் பிடிக்கவே இல்லை. அதனால், அவனையும் கொன்றுபோட்டார்.+
-