9 உங்கள் கண்களால் பார்த்தவற்றை மறந்துவிடாதபடி மிகக் கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் இருங்கள். இவை உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களுடைய நெஞ்சைவிட்டு நீங்கக் கூடாது. இவற்றை உங்களுடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.+
19 அவற்றை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்திருக்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவற்றைப் பற்றிப் பேச வேண்டும்.+