-
உபாகமம் 6:6-9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 இன்று நான் சொல்கிற இந்த வார்த்தைகளை உங்கள் இதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 7 அவற்றை உங்களுடைய பிள்ளைகளின் மனதில் பதிய வைக்கவும் வேண்டும்.*+ வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்திருக்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவற்றைப் பற்றிப் பேச வேண்டும்.+ 8 அவற்றை உங்கள் கையில் ஒரு நினைப்பூட்டுதல் போலவும் நெற்றியில் ஒரு அடையாளம் போலவும் கட்டிக்கொள்ள வேண்டும்.+ 9 அவற்றை உங்கள் வீட்டு வாசலின் நிலைக்கால்களிலும் நகரவாசல்களிலும் எழுதிவைக்க வேண்டும்.
-