8 அப்போது, யோர்தான் பிரதேசத்திலிருந்த இரண்டு எமோரிய ராஜாக்களின் தேசங்களைக் கைப்பற்றினோம்.+ அதாவது, அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரை கைப்பற்றினோம்.+ 9 (எர்மோன் மலையை சீரியோன் என்று சீதோனியர்கள் அழைத்தார்கள், ஆனால் எமோரியர்கள் அதை செனீர் என்று அழைத்தார்கள்.)