26பின்பு அவர், “‘ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை நீங்கள் உண்டாக்கக் கூடாது.+ செதுக்கப்பட்ட சிலைகளையோ+ பூஜைத் தூண்களையோ வைத்து வணங்கக் கூடாது. உங்கள் தேசத்தில் கற்சிலைகளை+ வைத்து அவற்றின் முன்னால் தலைவணங்கக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.
15 அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள், ஓரேபிலே நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா உங்களோடு பேசிய நாளில் நீங்கள் எந்த உருவத்தையும் பார்க்கவில்லை. 16 ஆகவே, எந்தவொரு வடிவத்திலும் சின்னங்களையோ சிலைகளையோ உண்டாக்காதீர்கள்.+ ஆண் உருவம், பெண் உருவம்,
23 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு செய்த ஒப்பந்தத்தை மறக்காதபடி கவனமாக இருங்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா தடை செய்திருக்கிற எந்தவொரு உருவத்தையும் உண்டாக்காதீர்கள்.+
15 ‘யெகோவாவுக்கு அருவருப்பானதும்+ மனுஷனின்* கைவேலையுமான செதுக்கப்பட்ட சிலையையோ உலோகச் சிலையையோ செய்து அதை மறைத்துவைப்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’* என்று சொல்ல வேண்டும்.)
29 நாம் கடவுளுடைய பிள்ளைகளாக*+ இருப்பதால், மனுஷர்களுடைய சிற்ப வேலைப்பாட்டாலும் கற்பனையாலும் வடிவமைக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப் போலக் கடவுள் இருப்பார் என்று நாம் நினைக்கக் கூடாது.+