-
எபிரெயர் 12:5-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 பிள்ளைகளுக்குச் சொல்லப்படுவதுபோல் உங்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரையை நீங்கள் அடியோடு மறந்துவிட்டீர்கள்: “என் மகனே, யெகோவாவின்* புத்திமதியை* அலட்சியம் செய்யாதே, அவர் உன்னைத் திருத்தும்போது சோர்ந்துபோகாதே. 6 யெகோவா* யார்மேல் அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார். சொல்லப்போனால், யாரையெல்லாம் தன்னுடைய மகன்களாக ஏற்றுக்கொள்கிறாரோ அவர்களையெல்லாம் தண்டிக்கிறார்.”*+
7 உங்களைத் திருத்துவதற்காகத்தான்* கடவுள் உங்களைத் தண்டிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அதைச் சகித்துக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தன்னுடைய மகன்களைப் போல் நடத்துகிறார்;+ தகப்பன் கண்டித்துத் திருத்தாத மகன் உண்டா?+
-