7 உங்களைத் திருத்துவதற்காகத்தான்* கடவுள் உங்களைத் தண்டிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அதைச் சகித்துக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தன்னுடைய மகன்களைப் போல் நடத்துகிறார்;+ தகப்பன் கண்டித்துத் திருத்தாத மகன் உண்டா?+
9 பூமியிலுள்ள நம் தகப்பன்கள் நம்மைக் கண்டித்துத் திருத்தினாலும், நாம் அவர்களுக்கு மரியாதை கொடுத்தோம்; அப்படியானால், வாழ்வு பெறுவதற்காக நம் பரலோகத் தகப்பனுக்கு* நாம் இன்னும் அதிகமாகக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், இல்லையா?+