28 இஸ்ரவேலர்களைக் கடலுக்குள் துரத்திச்சென்ற பார்வோனின் போர் ரதங்களும் குதிரைப்படைகளும் மற்ற எல்லா படைகளும் புரண்டுவந்த தண்ணீரில் மூழ்கிப்போயின.+ ஒருவர்கூட தப்பிப்பதற்குக் கடவுள் விடவில்லை.+
29 விசுவாசத்தால்தான் அவர்கள், வறண்ட தரையில் நடப்பதுபோல் செங்கடலில் நடந்து போனார்கள்;+ எகிப்தியர்கள் அதைக் கடக்க முயற்சி செய்தபோது அதில் மூழ்கிப்போனார்கள்.+