உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+

  • உபாகமம் 28:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 உங்கள் வானம் செம்பைப் போலவும் பூமி இரும்பைப் போலவும் ஆகும்.*+

  • 1 ராஜாக்கள் 8:35, 36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 அவர்கள் உங்களுக்கு எதிராகத் தொடர்ந்து பாவம் செய்ததால்+ வானம் அடைபட்டு மழை பெய்யாமல் போகும்போது,+ அவர்கள் இந்த இடத்தை நோக்கி ஜெபம் செய்தால், உங்கள் பெயரை மகிமைப்படுத்தினால், அவர்களை நீங்கள் தாழ்த்தியதன்* காரணமாகத் தங்களுடைய பாவத்தைவிட்டுத் திருந்தினால்,+ 36 நீங்கள் பரலோகத்திலிருந்து கேட்டு உங்களுடைய ஊழியர்களும் உங்களுடைய மக்களுமான இஸ்ரவேலர்கள் செய்த பாவத்தை மன்னியுங்கள். அவர்கள் நடக்க வேண்டிய நல்ல வழியைக் கற்றுக்கொடுங்கள்;+ உங்களுடைய மக்களுக்குச் சொத்தாகக் கொடுத்த உங்கள் தேசத்தில் மழை பெய்யப் பண்ணுங்கள்.+

  • 2 நாளாகமம் 7:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 மழை பெய்யாதபடி நான் வானத்தை அடைக்கும்போது, நிலத்தை அழிப்பதற்கு வெட்டுக்கிளிகளை அனுப்பும்போது, என் மக்களைத் தாக்க கொள்ளைநோயை அனுப்பும்போது 14 என் பெயரால் அழைக்கப்படும் என் மக்கள்+ தாழ்மையாக நடந்து+ என்னிடம் ஜெபம் செய்தால், பரலோகத்திலிருந்து அதைக் கேட்பேன்; தங்களுடைய பொல்லாத வழிகளைவிட்டு விலகி என்னைத் தேடினால்,+ அவர்களுடைய பாவத்தை மன்னிப்பேன், அவர்களுடைய தேசத்தைச் செழிப்பாக்குவேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்