35 இப்படிக் கடினமாக உழைத்து பலவீனமானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை நான் உங்களுக்கு எல்லாவற்றிலும் காட்டியிருக்கிறேன்.+ ‘வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது’+ என்று எஜமானாகிய இயேசு சொன்ன வார்த்தைகளை மறந்துவிடாதீர்கள்” என்று சொன்னார்.
7 ஒவ்வொருவரும் வேண்டாவெறுப்பாகவும்* அல்ல, கட்டாயமாகவும் அல்ல,+ தன் இதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்.+
18 அதோடு, நன்மை செய்கிறவர்களாகவும், நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களாகவும், தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள மனமுள்ளவர்களாகவும்+ இருக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்.
16 அதோடு, நல்லது செய்வதற்கும், உங்களிடம் இருப்பதை மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுப்பதற்கும் மறந்துவிடாதீர்கள்;+ இப்படிப்பட்ட பலிகளைக் கடவுள் மிகவும் விரும்புகிறார்.+