-
உபாகமம் 12:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகவும் தான் குடிகொள்வதற்காகவும் உங்கள் கோத்திரங்களின் நடுவில் எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறாரோ அந்த இடத்துக்குப் போய் அவரை வணங்க வேண்டும்.+ 6 உங்களுடைய தகன பலிகளையும்,+ மற்ற பலிகளையும், பத்திலொரு பாகங்களையும்,+ காணிக்கைகளையும்,+ நீங்கள் நேர்ந்துகொண்ட பலிகளையும், நீங்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலிகளையும்,+ ஆடுமாடுகளின் முதல் குட்டிகளையும் அங்கேதான் கொண்டுவர வேண்டும்.+
-
-
உபாகமம் 14:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்தில் தானியம், புதிய திராட்சமது, எண்ணெய் ஆகியவற்றில் பத்திலொரு பாகத்தையும், ஆடுமாடுகளின் முதல் குட்டிகளையும் நீங்கள் சாப்பிட வேண்டும்.+ அப்படிச் செய்தால், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு எப்போதும் பயந்து நடக்கக் கற்றுக்கொள்வீர்கள்.+
-
-
உபாகமம் 16:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்தில் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆண்களும், பெண்களும், உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களும், மற்ற தேசத்து ஜனங்களும், அப்பா இல்லாத பிள்ளைகளும்,* விதவைகளும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+
-