-
யாத்திராகமம் 18:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து திறமையான ஆண்களைத் தேர்ந்தெடுத்து 1,000 பேருக்குத் தலைவர்களாகவும், 100 பேருக்குத் தலைவர்களாகவும், 50 பேருக்குத் தலைவர்களாகவும், 10 பேருக்குத் தலைவர்களாகவும் நியமித்தார். 26 அவர்கள் ஜனங்களுடைய வழக்குகளை விசாரித்து அவர்களுக்குத் தீர்ப்பு சொன்னார்கள். சிக்கலான வழக்குகளை மோசேயிடம் கொண்டுவந்தார்கள்,+ சின்னச் சின்ன வழக்குகளுக்கு அவர்களே தீர்ப்பு சொன்னார்கள்.
-
-
2 நாளாகமம் 19:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 எருசலேமில் வாழ்ந்த யோசபாத் தன் மக்களை மறுபடியும் போய்ச் சந்திப்பதற்காகப் பயணம் செய்தார்; அதற்காக பெயெர்-செபாமுதல் எப்பிராயீம் மலைப்பகுதிவரை போனார்;+ தங்கள் முன்னோர்களின் கடவுளான யெகோவாவைத் திரும்பவும் வழிபட ஆரம்பிக்கும்படி+ அவர்களை உற்சாகப்படுத்தினார். 5 அதோடு, யூதா தேசத்திலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் ஒவ்வொன்றிலும் நீதிபதிகளை நியமித்தார்.+
-