6 உங்கள் மகனோ, மகளோ, கூடப் பிறந்த சகோதரனோ, ஆசை மனைவியோ, ஆருயிர் நண்பனோ ரகசியமாக உங்களிடம் வந்து, வேறு தெய்வங்களை வணங்கலாம் என்று சொல்லி ஆசைகாட்டலாம்.+ அந்தத் தெய்வங்கள் உங்களுக்கோ உங்களுடைய முன்னோர்களுக்கோ தெரியாத தெய்வங்களாக இருக்கலாம்.
10 எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வழியைவிட்டு விலகும்படி அந்த நபர் உங்களைத் தூண்டியதால், அவரைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும்.+