-
மத்தேயு 19:3-8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அவரைச் சோதிப்பதற்காக பரிசேயர்கள் அவரிடம் வந்து, “ஒருவன் தன்னுடைய மனைவியை எந்தக் காரணத்துக்கு வேண்டுமானாலும் விவாகரத்து செய்வது சரியா?”+ என்று கேட்டார்கள். 4 அதற்கு அவர், “கடவுள் ஆரம்பத்தில் மனுஷர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார்+ என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? 5 ‘இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்;* அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக* இருப்பார்கள்’+ என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா? 6 அதன்படி, அவர்கள் இரண்டு பேராக இல்லாமல், ஒரே உடலாக இருப்பார்கள். அதனால், கடவுள் இணைத்து வைத்ததை* எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்”+ என்று சொன்னார். 7 “அப்படியானால், விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்யலாம் என மோசே ஏன் சொன்னார்?”+ என்று அவர்கள் கேட்டார்கள். 8 அதற்கு அவர், “உங்களுடைய இதயம் இறுகிப்போயிருந்த காரணத்தால்தான் உங்கள் மனைவியை விவாகரத்து செய்ய அவர் அனுமதித்தார்.+ ஆனால், ஆரம்பத்திலிருந்து அப்படி இல்லை.+
-