7 ஆனால், யூதாவின் மூத்த மகன் ஏர் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவந்தான். அதனால் யெகோவா அவனைக் கொன்றுபோட்டார். 8 அவன் இறந்துவிட்டதால் யூதா தன்னுடைய மகன் ஓனேனிடம், “கொழுந்தனுடைய* கடமைப்படி நீ உன் அண்ணன் மனைவியைக் கல்யாணம் செய்துகொண்டு அவனுக்கு வாரிசு உண்டாக்கு”+ என்றார்.
5 அப்போது போவாஸ், “நகோமியிடமிருந்து மட்டுமல்ல, இறந்துபோனவனுடைய மனைவியாகிய மோவாபியப் பெண் ரூத்திடமிருந்தும் நீ அந்த நிலத்தை வாங்க வேண்டும். அப்போதுதான், இறந்துபோனவனுடைய பெயரிலேயே அந்தச் சொத்து தொடர்ந்து இருக்கும்”+ என்றார்.
19 “போதகரே, ஒருவன் பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்துகொண்டு அவனுக்காக வாரிசு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்திருக்கிறார்.+