15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+
10 திருச்சட்டத்தின் செயல்களை நம்பியிருக்கிற எல்லாரும் சாபத்துக்கு உட்பட்டவர்கள். ஏனென்றால், “திருச்சட்ட சுருளில் எழுதப்பட்ட அனைத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்காத எல்லாரும் சபிக்கப்பட்டவர்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+